ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அமல் என்ற நியூபேசுடன் சரண்யா மோகன் நடித்துள்ள படம் கோலாகலம். அமலின் அப்பா பி.ஜி.சுரேந்திரன்தான் தயாரிப்பாளர் கம் டைரக்டர். படத்தை சமீபத்தில் பார்த்த தணிக்கை குழுவினர் கட் எதுவும் கொடுக்காமல் யு சான்றிதழ் கொடுத்தனர். யு வாங்கிய கையோடு வரிவிலக்கு குழுவுக்கும் படத்தை போட்டுக்காட்டி வரிவிலக்கையும் பெற்று விட்டார் டைரக்டர்.
அதைப் பற்றி அவர் கூறியதாவது: "மனிதனோட வாழ்க்கை கோலாகலம் நிறைஞ்சது. அது இல்லேன்னா மனுஷன் பிரசர் வந்து செத்துப்போயிடுவான். இந்த கோலாகலம் ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ற மாதிரி மாறி வந்துக்கிட்டு இருக்கு. இன்றைய இளைஞர்களின் கோலாகலம் எப்படி இருக்கு. அதனால என்ன லாபம், நஷ்டமுன்னு சொல்ற படம். சென்னார் குழு பார்த்துட்டு பாராட்டினாங்க. வரிவிலக்கு குழுவில இருந்த பி.வாசு சார் முதல் படமே பிரமாதமா பண்ணியிருக்கீங்கன்னு சொன்னாரு. சந்தோஷமா இருக்கு. 200 தியேட்டருக்கு மேல் ரிலீஸ் பண்ண பிளான் பண்ணியிருக்கோம்" என்றார்.