புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
ரஜினி நடித்துள்ள சூப்பர் டெக்னிக் அனிமேஷன் படமான கோச்சடையான் வருகிற பொங்கல் அன்று ரிலீசாகும், அதற்கு முன்னதாக டிசம்பர் 12ந் தேதி ரஜினி பிறந்த நாளில் பாடல்கள் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த இரண்டு தேதிகளிலும் மாற்றம் வரும் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
மோசன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள இந்தப்ப படம். சமீபத்தில் இந்த தொழில்நுட்பத்தில் வந்துள்ள சில புதிய கண்டுபிடிப்புகளையும் படத்தில் சேர்க்கலாம் என்று படத்தின் டைரக்டரும், ரஜினியின் இளைய மகளுமாக சவுந்தர்யா விரும்பினாராம். இதற்கு தயாரிப்பாளர்களான ஈராஸ் இண்டர்நேஷனல் மற்-றும் குளோபல் என்டர்டெயிண்ட்மண்ட் நிறுவனம் ஒத்துக் கொண்டதால் அதற்கான பணிகள் நடந்து வருவதால் இந்த தாமதம் என்கிறார்கள்.
ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 25ந் தேதி கிறிஸ்துமஸ் அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும். படம் ஜனவரி 24ந் தேதி வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கிறது. எப்படி இருந்தாலும் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 12 அன்றும், படம் ரிலீஸ் பொங்கல் அன்றும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
இதனால் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா தயாரிப்பாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். வருகிற பொங்கல் தல, தளபதி மோதும் ஹாட் பொங்கலாக இருக்கப்போகிறது.