ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கோலிவுட்டில், இதுவரை எந்த நடிகைக்கும் கிடைத்திராத பெருமை, நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது. அவரின், இரண்டாவது இன்னிங்ஸ், ரொம்பவே பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை, முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து வந்த நயன்தாரா, இப்போது, இளம் ஹீரோக்களுடனும் ஜோடி சேரத் துவங்கி விட்டார்.
இதுகுறித்து விசாரித்தபோது, சுவாரசியமான தகவல் தெரியவந்தது. கோலிவுட்டில் இப்போது மார்க்கெட்டில் உள்ள, பல இளம் ஹீரோக்கள் அனைவரும், நயன்தாராவுடன் ஜோடி சேர வேண்டும்; டூயட் பாட வேண்டும் என, ஆசைப்படுகின்றனராம். இதனால், தங்கள் படங்களில், எப்படியாவது நயன்தாராவை புக் செய்யும்படி, தயாரிப்பாளர்களை வற்புறுத்துகின்றனராம். இதுபற்றிய தகவல் நயனுக்கு எட்டியதும், இதழோரத்தில், சிறிய புன்னகையை மட்டும் கசிய விட்ட, நயன், இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர, சம்மதம் தெரிவித்துள்ளாராம்.