இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் |
அனுபமா பரமேஸ்வரன்... பெரும் வெற்றி பெற்ற 'டிராகன்' திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். 'ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா' திரைப்படத்தில் தனது அபார நடிப்புத்திறனை பல கோணங்களில் வெளிப்படுத்தியவர். அடுத்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் 'பைசன்' படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. தன்னுடைய திரைப்பயணம் குறித்து பேசும் அனுபமா...
'பைசன்' எப்படி கிடைத்தது
நான் மாரி செல்வராஜின் பெரிய ரசிகை. அவர் வித்தியாசமான இயக்குனர். அவரோட 'பிலிம் மேக்கிங்' எனக்கு ரொம்ப பிடிக்கும். 'பரியேறும் பெருமாள்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. ஆனா என்னுடைய தேதிகள் சரியா வராததினால் அந்த படத்துல நான் நடிக்க முடியல. ஆனா என் அதிர்ஷ்டம், இவ்வளவு வருஷத்துக்கு பிறகு 'பைசன்' படத்துல என்ன நடிக்க கேட்டாங்க. உடனே 'எஸ்' சொல்லிட்டேன். உண்மையா இந்த படத்தில் நான் நிறைய கத்துக்கிட்டேன்.
மாரி செல்வராஜ் நடிப்பை நேர்த்தியாக கற்றுத்தருவார். சிலநேரங்களில் நடிப்பதில் இவ்வளவு கஷ்டம் இருக்கே என்று கூட தோன்றும். என் ஸ்டைல் எல்லாவற்றையும் உடைத்து அந்த கதாபாத்திரத்தை எனக்குள் கொண்டு வந்தார். நானாக டப்பிங் பேசியிருக்கிறேன். என்றாலும் இதில் என் கிரெடிட் என்று எடுத்துக் கொள்ள எதுவும் இல்லை. எல்லாம் இயக்குனர் தந்த பயிற்சி தான்.
திருநெல்வேலி கதைக்களம் எப்படி பயிற்சி எடுத்தீங்க
நானும் ரெஜிஷாவும் படத்துல முக்கியமான 'ரோல்' பண்றோம். திருநெல்வேலிக்கு நாங்க போனோம். வயலில் நடப்பது, வேலை செய்வது, விறகு வெட்டுவது, எடுத்து வருவது எப்படி, அந்த ஊர் மொழி பேசுவது எப்படி என்று அந்த ஊர் மக்களை வைத்தே பயிற்சி அளித்தார்கள். நான் இதுவரைக்கும் செய்த கதாபாத்திரங்களில் இது ரொம்பவே வித்தியாசமானது.
படத்தில் கபடி விளையாடுகிறீர்களா... உங்களுக்கு கபடி விளையாட தெரியுமா
கபடி விளையாட தெரியாது. ஹீரோ துருவ் தான் கபடி விளையாட ரொம்ப பயிற்சி எடுத்தாரு. அந்த படத்துல நடிச்ச எல்லாருமே ஒரிஜினல் கபடி பிளேயர்ஸ். அவங்க முன்னாடி கபடி தெரியாம நடிக்க முடியாது. மக்களுக்கு முன்னாடி ஒரிஜினலா இருக்கணும்னு உண்மையாகவே கபடி விளையாட பயிற்சி எடுத்தார்.
டிராகன் வெற்றியை பைசன் படத்திலும் எதிர்பார்க்கலாமா
டிராகன் படத்துல இருந்தது எனக்கு பெருமை. பைசன் படமும் அந்த அளவுக்கு போகும். தீபாவளி மாதிரி ஒரு பண்டிகை நாளில் இந்த படம் வெளிவருவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மக்கள் கண்டிப்பா கொண்டாடுவாங்க!
தமிழ் ரசிகர்கள் உங்களை பார்க்கும்போது என்ன சொல்றாங்க
நான் எப்போ சென்னை வந்தாலும் என்னுடைய முந்தின படங்களில் மாலதி, கீர்த்தி என்று என் கேரக்டர் பெயர் சொல்லி நான் நடிச்ச படங்களை பற்றி சொல்வாங்க. நடுவில் தமிழில் ஒரு இடைவெளி இருந்தது. ஆனாலும் மக்கள் என்னை நினைவு வைத்திருப்பது மகிழ்ச்சி.
பொதுவாக படங்களை எப்படி தேர்வு செய்றீங்க
நல்ல கதை, என் கதாபாத்திரம் முக்கியம். அதை அடுத்து தான் மற்றவை எல்லாம்.
உங்க சின்ன வயசு தீபாவளி நினைவுகள்
தமிழ்நாடு மாதிரி பெரிய அளவில் கேரளாவில் எங்கள் ஊரில் தீபாவளி கொண்டாட மாட்டாங்க. ஆனாலும் தீபங்கள் ஏற்றுவது, பட்டாசு வெடிப்பது, புது டிரஸ் அணிவது என்று அமர்க்களமாக இருக்கும். ஆனா இந்த தீபாவளி சென்னையில், மிகப்பெரிய கொண்டாட்டமா இருக்கும். அதற்கு தயாராகி விட்டேன்.