பிளாஷ்பேக்: எஸ்.பி.முத்துராமனை ஏமாற்றிய 50வது படம் | சுபத்ரா ராபர்ட் கதை நாயகியாக நடிக்கும் 'மெல்லிசை' | ராம்லீலா நாடகத்திலிருந்து பூனம் பாண்டே நீக்கம் | விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி நாடகம் பார்க்க ஸ்பெஷல் ரயில் | கலைமாமணி விருது : ஜெயப்பிரியா விக்ரமன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: முதல் திரைப்படக் கல்லூரி மாணவன் தந்த முழுமையான கலைப்படைப்பு “அவள் அப்படித்தான்” | எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவி, விக்ரம்பிரபு, லிங்குசாமி, அனிருதுக்கு கலைமாமணி விருது : பாடகர் கே.கே.ஜேசுதாஸிற்கும் கவுரவம் | ஓஜி : கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி | 'மனதை திருடி விட்டாய்' நாராயணமூர்த்தி காலமானார் |
தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடித்த '1947 ஆகஸ்ட் 14' திரைப்படம் வெளியானது. வரலாற்று பின்னணியில் உருவான இந்த படத்தை தொடர்ந்து தற்போது கவுதம் கார்த்திக் ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லர் படமாக உருவாகி வரும் 'ரூட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூரிய பிரதாப் என்பவர் இயக்கி வருகிறார். கதாநாயகியாக பவ்யா ட்ரிக்கா நடிக்க பாலிவுட்டை சேர்ந்த அபர்சக்தி குரானா என்பவர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தமிழுக்கு வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்தில் தான் கவுதம் கார்த்திக் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துவங்கி அதையும் விரைவாக ரூட் குழுவினர்கள் முடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.