பிளாஷ்பேக் : டீ கடையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹீரோயின் | முதல் நாளில் ரூ.27 கோடி வசூலித்த 'மிராய்' | 'கங்குவா' கதாநாயகி வீட்டில் துப்பாக்கிச் சூடு : இது ‛டிரைலர்' என எச்சரிக்கை | கர்நாடக இசைப்பாடகி எஸ்.ஜே.ஜனனியின் 3 டாட் ரெக்கார்டிங் ஸ்டுடியோஸ் திறப்பு : கலைஞர்கள் பங்கேற்பு | டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த கர்நாடகா அரசு | சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறிய ஐஸ்வர்ய லட்சுமி | பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்' | ‛ஜனநாயகன்' படத்திற்கு செக் வைக்க வரும் ‛பராசக்தி' | கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர் | வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி |
கடந்த மார்ச்சிலிருந்து மலையாளத்தில் எல்2 எம்புரான், தொடரும் மற்றும் சமீபத்தில் ஹிருதயபூர்வம் ஆகிய படங்கள் மோகன்லால் நடிப்பில் வெளியாகின. அதேப்போல கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு தெலுங்கில் வெளியான கண்ணப்பா என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் மோகன்லால். இந்த நிலையில் அடுத்ததாக தெலுங்கு, மலையாளம் என இரு மொழிகளில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள விருஷபா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
வரும் அக்டோபர் 16ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் மோகன்லால். படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் வியாஸ் மோகன்லாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை கூறியுள்ளார். நந்தா கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை சிவரஞ்சனி மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் தம்பதியின் மகனான மேகா ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.