'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

'குபேரா'வுக்குபின் தனுஷ் நடிப்பில் 'இட்லிகடை' ரிலீஸ் ஆக உள்ளது. அக்டோபர் 1ல் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், செப்டம்பர் 14ல் சென்னையில் பிரமாண்ட பாடல் வெளியீட்டு விழா நடக்கப்போகிறது. இப்போது 'போர்த்தொழில்' விக்னேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
அடுத்து 'அமரன்' தேசிங்கு பெரியசாமி படத்தில் நடிக்கப்போகிறார். அதற்கடுத்து தெலுங்கில் 'விராட பருவம்' படத்தை இயக்கிய வேணு இயக்கத்தில் நடிக்கப்போகிறோம். ராம்சரண், சாய்பல்லவி நடித்த அந்த படம் தெலுங்கில் பேசப்பட்டது. அவர் சொன்ன சீரியஸ் கதை பிடித்து இருந்ததால் அவருக்கு கால்ஷீட் கொடுத்து இருக்கிறாராம். தமிழை போல் தனுசுக்கு தெலுங்கு மார்க்கெட் உருவாகி வருகிறது. அதனால், குபேராவுக்குபின் மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்கப்போகிறாராம். அதேபோல் காமெடி, ஜாலியான கதைகளை தவிர்த்து அழுத்தமான கதைகளில் நடிக்கவே ஆர்வமாக இருக்கிறாராம்.