பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தியேட்டர்களைப் பிடிப்பதில் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதுமே கடும் போட்டி இருக்கிறது. முன்னணி நடிகர்களின் படங்கள், பிரம்மாண்டப் படங்கள் வெளிவந்தால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், நல்ல தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய போட்டி ஏற்படுவது வழக்கம்.
கடந்த வாரம் தமிழில் 'கூலி', ஹிந்தியில் 'வார் 2' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'கூலி' படத்தை 2டி வடிவில் மட்டுமே திரையிட முடிந்தது. 'வார் 2' தயாரிப்பு நிறுவனம் “ஐமேக்ஸ் 2டி, 4 டிஎக்ஸ், டால்பி சினிமா 2டி, ஐஸ்' ஆகியவை கொண்ட தியேட்டர்களை இரண்டு வாரங்களுக்கு எக்ஸ்க்ளூசிவ் ஒப்பந்தம் போட்டு 'கூலி' படத்தை அந்தத் தியேட்டர்களில் திரையிட சிக்கலை ஏற்படுத்தியது.
எதிர்பார்த்ததைப் போல 'வார் 2' படத்திற்கு வரவேற்பு இல்லாமல் போக 'கூலி' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்று முதல் வார நாட்கள் ஆரம்பமாவதால் 'வார் 2' திரையிடப்பட்டுள்ள 'ஐமேக்ஸ் 2டி' உள்ளிட்ட மற்ற வடிவ தியேட்டர்களில் முன்பதிவு அப்படியே இறங்கிப் போய்விட்டது. இதனால், தொடர்ந்து அந்தத் தியேட்டர்களில் படத்தைத் திரையிட தியேட்டர்காரர்கள் முன் வருவார்களா என்பது சந்தேகம்தான்.
தான் மட்டுமே வசூலித்தால் போதும் என்று நினைத்த 'வார் 2' குழுவுக்கு வசூல் ஏமாற்றத்தையே தந்துள்ளது.