தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
இந்தியத் திரையுலகத்தில் தனது 75வது வயதிலும் சாதனை படைக்கும் ஒரு நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் மட்டும் அவர் படைத்த சாதனைகள் ஏராளம், ஏராளம்.
தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றதோடு, அதை மற்ற நடிகர்களும் இன்று அனுபவிக்கும் அளவிற்கு தனிப் பாதையைப் போட்டு வைத்தவர். 1975ல் வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' முதல் நேற்று வெளியான 'கூலி' வரை அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் நிறைய உண்டு.
கமர்ஷியல் ஹீரோவாக அவரைக் குறிப்பிட்டாலும் அவரது ஆரம்ப காலப் படங்களில் அவர் ஏற்று நடித்த உணர்வுபூர்வமான கதாபாத்திரங்கள் உண்டு. அவற்றிலேயே தனது நடிப்பின் மூலம் முத்திரை பதித்தவர். 'ஸ்டார்' என்பது அப்படியே நேரடியாக வந்துவிடாது, நடிக்கத் தெரிந்த ஒரு நடிகர் மட்டுமே 'ஸ்டார்' ஆக முடியும் என்பார்கள். அந்த ஸ்டார், சூப்பர்ஸ்டார் ஆக இத்தனை வருடங்களாக தமிழ் சினிமாவின் 'ராஜா'வாக நீடித்து வருகிறார்.
தமிழில் மட்டும் சாதிக்காமல், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சில வெற்றிப் படங்களில் நடித்தவர். ஆங்கிலத்தில் ஒரு படம், வங்களாத்தில் ஒரு படம், மலையாளத்தில் சில படங்கள் என அவருடைய படக்கணக்கில் 172 படங்கள் வந்துவிட்டன.
எத்தனை ஸ்டார்கள் அவருக்குப் பின்னால் வந்தாலும், அவரைப் போன்ற சூப்பர்ஸ்டார் ஆக யாரும் ஆக முடியாது என்பதே நிதர்சன உண்மை.