‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் | லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா | ஆக் ஷன் ரோல் என சொன்னதும் அப்பா சொன்ன வார்த்தை : கல்யாணி பிரியதர்ஷன் | ‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! |
தியேட்டர் அல்லாத வருவாய் என்பது சில வருடங்களுக்கு முன்பு சாட்டிலைட் டிவி உரிமை மூலம் அதிகமாக வந்தது. ஓரளவுக்கு ஓடிய படங்களாக இருந்தாலும் அந்தப் படங்களை குறைந்த விலை கொடுத்தாவது சாட்டிலைட் டிவி சானல்கள் வாங்கின. அதனால், தியேட்டர்களில் படங்கள் மூலம் வருவாய் கிடைக்கவில்லை என்றாலும் சாட்டிலைட் டிவி உரிமை விற்பதன் மூலம் தங்கள் நஷ்டங்களிலிருந்து தயாரிப்பாளர்கள் தப்பித்தார்கள்.
ஆனால், ஓடிடி உரிமை என்பது சாட்டிலைட் டிவி உரிமை போல இல்லை என்பது தற்போதுதான் தயாரிப்பாளர்களுக்கும் புரிய வந்துள்ளது. சொல்லப் போனால், ஓடிடி வந்ததால் சிறிய படங்களை வாங்கி வந்த சாட்டிலைட் டிவி நிறுவனங்களும் அவற்றை வாங்குவதை நிறுத்திவிட்டன. ஓடிடி உரிமைகளையும் விற்க முடியாமல், சாட்டிலைட் டிவி உரிமைகளையும் விற்க முடியாமல் பல சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தவித்து வருகிறார்கள்.
அப்படியே சிலரது முயற்சியால் சில படங்கள் விற்கப்பட்டாலும் பார்க்கும் நிமிடங்களுக்கு ஏற்ப பங்குத் தொகை என முட்டுக்கட்டை வைத்துள்ளன ஓடிடி நிறுவனங்கள். அதனால், சொற்ப தொகை மட்டுமே கிடைக்கும் சூழல் உருவானது. அதுவும் தற்போது குறைந்துவிட்டது.
இப்போதைய நிலையில் பட வெளியீட்டிற்கு முன்பாக ஒரு சில நடிகர்களின் படங்களை மட்டும்தான் ஓடிடி நிறுவனங்கள் வாங்க விருப்பம் தெரிவிக்கிறார்களாம். இந்த வருடத்தில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், சூர்யா, அஜித் (விடாமுயற்சி) ஆகியோர் நடித்து வெளிவந்த படங்கள் தியேட்டர்களில் தோல்வியடைந்தன. அவற்றிற்கான ஓடிடி உரிமை வெளியீட்டிற்கு முன்பே முடிக்கப்பட்டதால் அந்த நிறுவனங்களுக்கும் நஷ்டம் தான் என்கிறார்கள். தோல்விப் படங்களை ஓடிடி தளங்களில் யாரும் விரும்பிப் பார்க்க முன் வருவதில்லையாம். அதனால், வெளியீட்டிற்குப் பிறகு படம் ஓடவில்லை என்றால் என்ன விலை என்றும் ஒப்பந்தத்திலும் மாற்றம் செய்கிறார்களாம்.
தமிழ் சினிமாவில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டிய தருணம் என வந்துவிட்டது என பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்கங்களே பிரிந்து கிடப்பதால் அது அவ்வளவு சீக்கிரத்தில் நடக்காது என படமெடுக்கும் சில சிறிய தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.