இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சென்னை வைஷ்ணவா கல்லூரி மாணவியான பவ்யா திரிகா 'கதிர்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ரியோ ராஜ் ஜோடியாக நடித்த 'ஜோ' படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது வெளியாகி உள்ள 'பன் பட்டர் ஜாம்' படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "பன் பட்டர் ஜாம் படத்தில் நான் நடித்திருந்த நந்தினி கேரக்டர் ரசிகர்களையும், விமர்சகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. இன்றைய இளம் பெண்களை அந்த கேரக்டர் பிரதிபலித்ததே அதற்கு காரணம். இதற்கு முன் பல வாய்ப்புகள் வந்தபோதும் அதனை தவிர்த்தேன். வழக்கமான, ஜீவன் இல்லாத ஹீரோயின் கதாபாத்திரங்களைத் தவிர்த்து, உண்மையான நடிப்பு திறமை வெளிப்படும் கதாபாத்திரத்திற்காக காத்திருந்தேன். அதனால் சிறு இடைவெளியும் ஏற்பட்டது" என்றார்.