ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கோச்சடையான் படத்தின் லேட்டஸ்ட் நியூஸ் இதுதான், படத்தில் நடிகர் ரஜினி, சுறா மீனுடன் சண்டை போடுகிறாராம். எந்திரன் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், அவதார், டின் டின் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய 3டி படம் இதுவாகும். படத்தில் ரஜினி அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவருடன் சரத்குமார், ஆதி, நாசர், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோச்சடையான் படம் பற்றி புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் லேட்டஸ்ட் தகவல் ரஜினி, சுறா மீன் உடன் சண்டை போடுவது தான். படத்தில் வரும் கிராபிக்ஸ் ரஜினி, பயங்கரமான சுறா மீனுடன் சண்டை போடுகிறாராம். இந்த காட்சியில் ரசிகர்கள் மிரள்வது உறுதி என்று யூனிட்டை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். இதற்கிடையில் கோச்சடையானைத் தொடர்ந்து டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை ரஜினியை வைத்தே அறிவிக்கச் செய்ய வேண்டும் என்று காத்திருக்கிறாராம் கே.எஸ்.ரவிக்குமார்.