சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு | 'டிராகன்' 100வது நாள் விழாவுக்கு 'ஆப்சென்ட்' ஆன ஹீரோயின்ஸ் | கலைத் துறையின் மாஸ்டர் : கமல்ஹாசனுக்கு பவன் கல்யாண் வாழ்த்து | 15 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அஜித், சரண் கூட்டணி | 2027ம் ஆண்டில் வெளியாகும் ‛பிச்சைக்காரன் 3' | தமிழில் ரீ-மேக் ஆகிறது தெலுங்கு ‛கோர்ட்' | விஜய் பட இயக்குனருடன் கைகோர்க்கும் அமீர் கான் | சூர்யா 46 படம் குறித்து பேசிய வெங்கி அட்லூரி |
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நல்ல கதைகளும், வித்தியாசமான கதைகளும் உள்ள படங்கள் ஜெயிக்கின்றன. அதேப்போல் திரைக்கதையை வித்தியாசமாக சொல்லும் இயக்குனர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில் இளம் இயக்குனரான கோபியும் தனது ‛யாதும் அறியான்' படைப்பின் மூலம் அனைத்து சினிமா ரசிகர்களையும் கவர்வார் என தெரிகிறது.
இந்த படத்தில் டீசர் நேற்று சரிகம தமிழ் யு-டியூப் தளத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. டீசரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது என்று தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும் என டீசரை பார்க்கையில் புரிகிறது.
இந்த படத்தில் முதன்மை ரோலில் அறிமுக நாயகன் தினேஷ் நடிக்க, அவருடன் அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தர்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை மாதத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..