திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
இப்போதெல்லாம் ஒரு பாடல் காட்சிக்கு, அல்லது ஒரு சண்டை காட்சிக்கு 5 முதல் 10 கேமராக்கள் வரை பயன்படுத்துகிறார்கள். ஆனால் 1960கள் வரை பெரும்பாலும் காட்சிகளுக்கு ஒரு கேமராவும், பாடல் மற்றும் சண்டைக்கு இரண்டு கேமராக்களும் மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள்.
1950 மற்றும் அதற்கு முன்பு அரிதாக இரண்டு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு காரணம் அன்று கேமராக்கள் குறைவாக இருந்ததும், அதன் வாடகை மிகவும் அதிகமாக இருந்ததும் ஆகும். அதோடு பிலிம் சுருளுக்கும் டிமாண்ட் இருந்தது.
இப்படியான சூழ்நிலையில் 1950ம் ஆண்டு வெளிவந்த 'மந்திரிகுமாரி' படத்தில் இடம் பெற்ற காலத்தால் அழியாத பாடலான 'வாராய்... நீ வாராய்... நான் போகுமிடமெல்லாம் நீ வாராய்...' என்ற பாடல் முதன் முறையாக மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கப்பட்டது. வில்லன் தன் மனைவியை ஆசையாக பாடி மகிழ்வித்து மலை உச்சிக்கு கூட்டிச் சென்று தள்ளி விட்டு அவளை கொல்வதுதான் பாடலின் சூழல். அவன் அவளை கொல்லப்போவதை மறைமுகமாக பாடலில் உணர்த்துவான், மனைவி அதை புரிந்து கொள்ளாமல் இயற்கையை ரசித்து பாடுவாள்.
இந்த பாடல் காட்சி ஏற்காட்டு மலையில் தற்போது 'லேடீஸ் ஷீட் 'என்று அழைக்கப்படும் பகுதியில் நடந்தது. இப்போது அது சுற்றுலாத்தலமாக இருந்தாலும் அப்போது அடர்ந்த காடாக இருந்தது. சரியான பாதைகள்கூட இல்லை. ஆனால் இயக்குனர் டங்கன் அங்குதான் படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து படமாக்கினார்.
பாடலுக்காக சிறிது தூரம் சாலை போடப்பட்டது. பின்னர் கரடுமுரடான பாதையில் கதை மாந்தர்களை நடக்க விட்டு படமாக்கப்பட்டது. மலையின் கீழ் ஆரம்பிக்கும் பாடல் மலை முகட்டில் முடியும். இந்த காட்சிக்காக ஒளிப்பதிவாளர் ஜே.ஜி.விஜயம் 3 கேமராக்களை பயன்படுத்தினார். இந்த பாடலை திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடி இருந்தனர். ஜி.ராமநாதன் இசை அமைத்திருந்தார். எம்.ஜி.ஆர், ஜி.சகுந்தலா, நம்பியார், எஸ்.ஏ.நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
படம் முடிந்து முதல் காப்பியை பார்த்த தயாரிப்பாளர் மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம். 'வாராய் நீ வாராய் பாடலை நீக்கி விடலாம். அது படத்தின் வேகத்திற்கு தடையாக இருக்கிறது' என்ற கருத்தை கூறினார். ஆனால் இயக்குனர் டங்கனும், இசை அமைப்பாளர் ஜி.ராமநாதனும் ஒரு நாள் மட்டும் பாடலோடு படம் வெளிவரட்டும், ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீக்கி விடலாம் என்றார்கள். பாடலோடு படம் வெளியானது. அந்த பாடல் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமானதுடன் காலத்தை கடந்தும் நிற்கிறது.