தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'குபேரா'. படத்தின் 'பிப்பி பிப்பி டம் டம் டம்' என்ற பாடலின் வெளியீட்டு நிகழ்வு நேற்று மும்பையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “குபேரா, ஒரு மாறுபட்ட படம், ஸ்பெஷலான படம். நிச்சயமா வழக்கமான படமில்லை. என் மனசுக்கு மிக நெருக்கமான படம், இங்க இருக்கிறவங்களும் இதை ஏத்துப்பாங்கன்னு நினைக்கிறேன். இந்தப் படத்துக்கான அனுபவம் மிகவும் சிறப்பான ஒன்று, விசித்திரமானதும் கூட. குப்பைக் கிடங்கு, குப்பை வண்டி என நிறைய சொல்லலாம். குப்பைக் கிடங்குல நானும், ராஷ்மிகாவும் ஆறேழு மணி நேரம் இருந்தோம். அப்ப அவங்க, தனக்கு எந்த நாற்றமும் வரலன்னு சொன்னாங்க, ஆனா என்னால அங்க நிக்கவே முடியலை, அந்த அளவுக்கு சிரமமா இருந்தது. அதையெல்லாம் மீறி நடிச்சோம். ஒவ்வொரு அனுபவமும் நமக்கு ஒரு பாடத்தைக் கத்துக் கொடுக்கும்.
நான் இந்தப் படத்துல பிச்சைக்காரனா நடிச்சிருக்கேன். அதுக்காக நிறைய ஆராய்ச்சி பண்ணேன், ஹோம் வொர்க் பண்ணேன், வெயில்ல நின்னேன்னுலாம் பொய் சொல்ல மாட்டேன். நான் ஜஸ்ட் படப்பிடிப்புக்குப் போனேன். அங்க டைரக்டர் சேகர் கம்முலா என்ன சொன்னாரோ அதை செஞ்சேன். சேகர் சார் திறமையானவர். அவர் எல்லாத்தையும் கத்துக் கொடுத்தாரு. ஒரு நல்ல மனிதர், தூய்மையானவர், நல்ல மனம் கொண்டவர். அவராலதான் இந்தப் படத்தைப் பண்ணேன். வெறும் 20 நிமிடத்துல இந்தக் கதையைச் சொன்னாரு. உடனே, நடிக்க சம்மதம் சொன்னேன்.
நான் ரொம்ப கீழான நிலைமையில இருந்துதான், இப்ப இந்த நிலைக்கு கடவுள் அருளால் வந்திருக்கேன். இந்தப் படத்தால அந்த உலகத்தைத் திரும்பிப் பார்த்தேன். அது எனக்கு சில விஷயங்களைக் கத்துக் கொடுத்தது, நோஸ்டால்ஜிக்காவும் இருந்தது. என்னோட சின்ன வயசுக்கும் இந்தப் படம் என்னைக் கொண்டு போச்சு, இப்படி பல காரணங்களுக்காக இந்தப் படத்துக்கு நான் நன்றி சொல்லணும்,” என்று பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா, ராஷ்மிகா இருவரும் தனுஷின் ஈடுபாட்டைப் பற்றிப் பாராட்டினர். ஜுன் 20ம் தேதி இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது.




