சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

நடிகர் திலகத்தின் அன்னை இல்லத்திலிருந்து தொடர்ந்து நடிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பிரபு முதல் வாரிசாக அறிமுமாகி 250 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். அவரது மகன் விக்ரம் பிரபு இப்போது முன்னணி நடிகராக இருக்கிறார்.
சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது முதல் மகன் துஷ்யந்த், சில படங்களில் நடித்துள்ளார், சில படங்களை தயாரித்துள்ளார்.
இந்தநிலையில் ராம்குமாரின் 2வது மகனும், துஷ்யந்தின் தம்பியுமான தர்ஷன் கணேசனும் சினிமாவுக்கு வருகிறார். சினிமா தொடர்பான படிப்புகளை படித்திருக்கும் தர்ஷன் கணேசன், பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் தயாரித்து, டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'லெனின் பாண்டியன்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ஆடு மேய்க்கும் ஒரு பெரியவருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் பாதுகாப்பு தரும் கதை. பெரியவராக கங்கை அமரனும், போலீஸ்காரராக தர்ஷன் கணேசனும் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோஜா நடிக்கிறார்.