'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தற்போது தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரின் பதவி காலம் கடந்த மார்ச் மாதமே முடிந்து விட்டது. ஆனால் நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் இவர்களது பதவி காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதற்கு விளக்கம் அளிக்குமாறு நடிகர் சங்கத்திற்கு உத்தரவிட்டது.
சங்க பொதுச் செயலாளர் விஷால் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட கட்டுமான பணிகள் 25 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு 60 சதவீத கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. எங்களுடைய பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் முடிவடைய இருந்த நிலையில் 2025-28 புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வேலைகள் தொடங்கப்பட்டால் சங்க நிர்வாகத்தின் கட்டிட பணிகள் பாதிக்கப்படும். எனவேதான், பொதுக்குழு, செயற்குழுவில் தற்போதைய நிர்வாகிகளுடைய பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனநாயக அடிப்படையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றி முடிவெடுக்க பொதுக்குழுவிற்கு உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பதவி கால நீட்டிப்பில் எந்தவித விதி மீறலும் இல்லை. விதிகளுக்கு உட்பட்டு நடந்த பொதுக்குழு தீர்மானத்தில் 300 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அதற்கான ஆவணம் பதிவுத்துறை பதிவாளரிடம் தாக்கல் செய்யபட்டுள்ளது. என்று அந்த மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து வழக்கை வருகிற 9ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.