இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
கன்னட திரையுலகின் பிரபல நடிகரான தர்ஷன் கடந்தாண்டு ஜூன் மாதம் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு ரேணுகா சுவாமி தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் செய்தார் என்பதால், அவர் இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அவருடன் பவித்ரா கவுடா உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு பலமுறை அவர்கள் ஜாமின் விண்ணப்பித்தும் அவை நிராகரிக்கப்பட்டு, ஒரு வழியாக கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் குறிப்பிட்ட நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கப்பட்டது..
அந்த வகையில் கடந்த ஐந்து மாதங்களாக வெளியூர் எங்கும் செல்லாமல் மைசூர் மற்றும் பெங்களூருக்குள்ளையே தனது பணிகளை கவனித்து வருகிறார் தர்ஷன். இந்த நிலையில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை துபாய் மற்றும் ஐரோப்பாவுக்கு செல்வதற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார் தர்ஷன்.
இது குறித்த வழக்கு விசாரணை வந்தபோது தர்ஷனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் வெளிநாடு தப்பித்து செல்லும் நோக்கில் இருப்பதால் அவர் அங்கிருந்து திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் அவருக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இது குறித்த தீர்ப்பு விபரம் என்னவென்று இன்று தெரியவரும்.