கூலி படத்தில் பஹத் பாசிலுக்கு உருவாக்கப்பட்ட வேடத்தில் சவுபின் ஷாகிர் | எந்த கூட்டணி அமையும்? யாராச்சும் உறுதிப்படுத்துங்கப்பா | சூப்பர் குட் பிலிம்ஸ் 100வது படத்தில் நடிப்பது யார்? | 'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு | நான் வேடிக்கையாக தான் பேசினேன் : லோகேஷ் கனகராஜிடம் வருத்தம் தெரிவித்த சஞ்சய் தத் | பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் |
தெலுங்கு முன்னணி நடிகரான பவன் கல்யாண் கடந்த சில வருடங்களாகவே ஒரு பக்கம் சினிமாவிலும் இன்னொரு பக்கம் அதே அளவு தீவிர அரசியலிலும் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அவரது படங்களின் படப்பிடிப்புகள், குறித்த நேரத்தில் நடைபெறாமல் ரிலீஸிலும் தாமதம் ஏற்பட்டது. அந்த வகையில் ஹரிஹர வீரமல்லு மற்றும் ஓஜி ஆகிய படங்கள் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தன. கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திராவின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பவன் கல்யாண், அதன்பிறகு இந்த இரண்டு படங்களையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடித்துக் கொடுத்து வருகிறார்.. அந்த வகையில் சமீபத்தில் தான் 'ஹரிஹர வீர மல்லு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து ஓஜி படத்தின் படப்பிடிப்பிலும் அவ்வப்போது கலந்து கொண்டு நடித்து வந்தார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மியின் வில்லனாக நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே அவர் உடல்நிலை சரியில்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவருக்கு பரிசோதனை செய்தபோது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து 'ஓஜி' படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இம்ரான் ஹாஸ்மி குணமடைந்து திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது.