நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இயக்குனர் கவுதம் மேனன் தனது தந்தையின் பூர்வீகமாக கேரளாவை கொண்டிருந்தாலும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தமிழ் படங்களை மட்டுமே இயக்கி வந்தார். இந்த நிலையில் முதன்முதலாக மலையாளத்தில் நடிகர் மம்முட்டியை வைத்து டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற படத்தை இயக்கினார். கடந்த ஜனவரி மாதம் இந்த படம் வெளியானது. ஒரு தனியார் டிடெக்டிவ் அதிகாரியான மம்முட்டி, தன்னிடம் கிடைக்கும் ஒரு லேடீஸ் பர்ஸை உரியவரிடம் ஒப்படைக்க செல்லும்போது ஏற்படும் எதிர்பாராத திடுக்கிடும் சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. படம் வெள்ளியாகி மிகப்பெரிய வசூலை தராவிட்டாலும் ஓரளவு வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியதாக அறிவிப்பு வெளியானது. ஆனாலும் இப்போது வரை இந்த படம் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்னும் ஓடிடிக்கான விலை முடிவாகவில்லை என்றும் அதில் இழுபறி நிலவுவதால் தான் இந்த தாமதம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இறுதித்தொகை பேசி முடிக்கப்பட்டு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.