டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

1931ம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் படம் 'சிட்டி லைட்ஸ்'. உலக புகழ்பெற்ற இந்த படம் உலக மொழிகளில் பல வற்றிலும் ரீமேக் செய்யப்பட்டது. பார்வையற்ற ஒரு பெண்ணை காதலிக்கும் நாயகன், அவளுக்கு பார்வை கிடைத்ததும் அவளை விட்டு பிரிந்து விடுவது மாதிரியான கதை.
இந்த படம் 1964ம் ஆண்டு 'ராஜி என் கண்மணி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆனது. சார்லி சாப்பிள் கேரக்டரில் டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்தார், அவரது காதலியாக ஸ்ரீரஞ்சனி நடித்தார். எஸ்.வி.ரங்காராவ், டி.பி.முத்துலட்சுமி, சந்திரபாபு, கே.ஆர்.செல்லம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
கே.ஜே.மகாதேவன் இயக்கி இருந்தர். ஹனுமந்த ராவ் இசை அமைத்திருந்தார். ஜெமினி ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரித்திருந்தார். சுமாரான வரவேற்பை பெற்றது.