டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

பிரபல மலையாள நடிகை மற்றும் இயக்குனர் ஷாலின் ஜோயா. தமிழில் 'கண்ணகி' படத்தில் நடித்தார்.'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார். மலையாளத்தில் ஷாலின் ஜோயா இயக்கிய 'தி பேமிலி ஆக்ட்' திரைப்படம் கவனத்தை ஈர்த்த நிலையில் தமிழில் படம் இயக்குகிறார்.
கிராமத்து பின்னணியில் 90களில் நடக்கும் நகைச்சுவை பேண்டஸி கதையாக அந்தபடம் உருவாகிறது. நக்கலைட்ஸ் புகழ் அருண், பிரிகிடா நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், இளவரசு, ஜாவா சுந்தரேசன், ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, இதுவரை பார்த்திராத முக்கிய வேடத்தில் தேவதர்ஷினியும், கவுரவ வேடத்தில் அஷ்வின் காக்குமனுவும் நடிக்கின்றனர். ஆர் கே இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
படம் குறித்து ஷாலின் ஜோயா பேசுகையில், ‛‛90களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் நடைபெறும் கதையின்படி, ஒரு கிராமத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது அங்குள்ளோரின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை நகைச்சுவை மற்றும் பேண்டஸி கலந்து சொல்ல உள்ளோம்'' என்கிறார்.