மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
தென்னிந்திய திரையுலகில் குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல முன்னணி ஹீரோக்கள் பல வருடங்களுக்கு முன்பு நடித்த படங்கள் அவ்வப்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சோட்டா மும்பை, திரைப்படம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மே 21ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை மோகன்லாலின் நண்பரான நடிகர் மணியம் பிள்ளை ராஜு என்பவர் தயாரித்திருந்தார். வரும் மே 21ம் தேதி மோகன்லாலின் பிறந்தநாள் என்பதால் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய அவர் திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான எம்புரான் மற்றும் தொடரும் என இரண்டு படங்களுமே ரசிகர்களின் வரவேற்பை பெற்று 200 கோடி வசூல் என்கிற இலக்கை தாண்டி உள்ளன. அதிலும் தொடரும் படம் தற்போதும் கூட தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டத்துடன் வரவேற்பு குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதே ஓட்டத்தில் சென்றால் எம்புரான் வசூலையும் தாண்டி மலையாள திரையுலகில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை இந்த படம் செய்யும் என்கிறார்கள். அதனால் தற்போது தேவையில்லாமல் சோட்டா மும்பை திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்தால் ரசிகர்களின் கவனம் அதை கொண்டாடுவதில் திரும்பி விடும் என்பதால், தொடரும் பட வசூல் ஓட்டத்தை தடை செய்ய விரும்பாமல் தற்போது சோட்டா மும்பை ரீ ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து உள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். புதிய தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.