கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
நடிகர் தனுஷ் ரஜினியின் மருமகனானபோது, அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற அளவுக்கு ரசிகர்களால் பேசப்பட்டவர். ஆனால், தனுசுக்கு அந்த பட்டத்தின் மீது ஈர்ப்பு இல்லை. சூபபர் ஸ்டார் என்பது ரஜினி சார் கஷ்டப்பட்டதற்கு பலனாக கிடைத்தது. அதை எளிதில் நான் எனது பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வது நியாயமில்லை என்று அதை தவிர்த்தார்.
மேலும், அவரிடம் ரஜினி சார் நடித்த படங்களில் நடிப்பீர்களா? அவர் நடித்தது மாதிரி நடிப்பீர்களா? என்று மீடியா சார்பில் அவரை நோக்கி அவ்வப்போது கேள்விகள் பாய்ந்து வருகின்றன. ஆனால், அதற்கு ஆரம்பத்திலிருந்தே, ரஜினி சார் ரொம்ப பெரிய நடிகர். அதனால் அவருடன் என்னை யாரும் ஒப்பிடாதீர்கள். மேலும், அவர் நடித்த படங்களில் நான் நடிப்பது இப்போது சாத்தியமில்லை என்றும் பதிலளித்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது ராஞ்சனா படம் சம்பந்தமாக மும்பையில் முகாமிட்டுள்ள தனுசிடம், ரஜினியின் மருமகன் என்பது உங்களுக்கு எந்த வகையில் ப்ளசாக உள்ளது என்று நிருபர்கள் கேட்டபோது, ரஜினியின் மருமகன் என்பதால் எனக்கு எந்தவித ப்ளஸோ, மைனஸோ கிடையாது என்று கூறியுள்ள தனுஷ், அவர் எப்படி அவரது வேலையை செய்து கொண்டிருக்கிறாரோ, அதேபோல் நானும் வழக்கம்போல் எனது வேலையை செய்து கொண்டிருக்கிறேன். மேலும், நாங்கள் இருவருமே எங்களது வேலைகளில் பிசியாக இருப்பதால் எனது ராஞ்சனா படம் பற்றிகூட எனது மாமனாரிடம் இதுவரை பேசிக்கொண்டதில்லை என்றும் கூறியுள்ளார் தனுஷ்.