ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்குமா என்பது ஆச்சரியம்தான். ஒரேநாளில் மூன்று நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்த படங்கள் மே 16ம் தேதியன்று வெளியாக உள்ளது.
சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்', சூரி நடித்துள்ள 'மாமன்', யோகி பாபு நடித்துள்ள 'ஜோரா கைய தட்டுங்க' ஆகிய படங்கள்தான் அவை. இவற்றில் சந்தானம் நடித்துள்ள படம் ஹாரர் காமெடி படமாகவும், சூரி நடித்துள்ள படம் சென்டிமென்ட் படமாகவும், யோகிபாபு நடித்துள்ள படம் க்ரைம் த்ரில்லர் படமாகவும் உருவாகியுள்ளது.
சந்தானம் கதாநாயகனாக நடிப்பதிலிருந்து தற்போது காமெடியனாகவும் மீண்டும் நடிக்க உள்ளார். யோகிபாபு அவ்வப்போது கதாநாயகனாக நடிப்பார். சூரி இனிமேல் காமெடியனாக நடிப்பாரா என்பது சந்தேகம்தான். இவர்கள் மூவரும் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைப் படங்களாக உள்ளன. படங்கள் நன்றாக இருந்தால் மூவருமே வெற்றி பெறலாம்.
இவர்களது படங்களுடன் நவீன் சந்திரா, அபிராமி நடித்துள்ள 'லெவன்' படமும் அன்றைய தினம் வெளியாக உள்ளது.




