புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

தெலுங்கில் அதிகப் படங்களிலும் தமிழில் சில குறிப்பிட்ட படங்களிலும் நடித்தவர் மறைந்த நடிகர் என்டி ராமராவ். தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராகவும் இருந்தவர். அவரது மகன்ககளில் பாலகிருஷ்ணா தற்போதும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது அண்ணன் மறைந்த ஹரி கிருஷ்ணாவும் நடிகராக சில படங்களில் நடித்துள்ளார். இவரது இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர்தான் தற்போதைய முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆர். முதல் மனைவிக்குப் பிறந்த கல்யாண் ராம் தெலுங்கில் நாயகனாக நடித்து வருகிறார்.
பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷகனா, 'ஹனுமன்' பட இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கும் படத்தில் அறிமுகமாகிறார் என கடந்த வருடம் அறிவித்தார்கள்.
ஹரிகிருஷ்ணாவின் பேரன் நந்தமூரி தாரக ராமராவ் தற்போது கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் இவர். சினிமாவில் அறிமுகமாவதற்காக முன்னரே சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். சீனியர் இயக்குனரான ஒய்விஎஸ் சவுத்ரி இயக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
என்டிஆரின் மூன்று மகள்கள், தெலுங்கு சினிமா பிரபலங்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். தமிழ் சினிமாவுடன் ஒப்பிடும் போது தெலுங்கு சினிமாவில்தான் வாரிசு குடும்பங்களும், நடிகர்களும் அதிகம். அது நான்காவது தலைமுறை வரை தற்போது வந்துள்ளது.




