லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் | பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி? | விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' அறிமுக டீசர் வெளியாகிறது? |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோ சிரஞ்சீவி. தற்போது 'விஷ்வம்பரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அப்படத்திற்குப் பிறகு அனில் ரவிப்புடி இயக்க உள்ள புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.
இந்த புதிய பபடத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளார். அவர் படத்தில் நடிக்க 18 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டதாக செய்திகள் வெளியாகின. அவ்வளவு சம்பளத்தைக் கொடுக்கத் தயாரிப்பு நிறுவனம் யோசித்தாகச் சொன்னார்கள். இருந்தாலும் படத்தில் நயன்தாரா நடிப்பதை இயக்குனரும், சிரஞ்சீவியும் விரும்பியதாகத் தெரிகிறது.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில கோடிகளைக் குறைத்துக் கொள்ள நயன்தாரா சம்மதம் சொல்லிவிட்டாராம். ஒப்பந்தம் கையெழுத்தானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
அனில் ரவிப்புடி கடைசியாக இயக்கி பொங்கலுக்கு வெளிவந்த 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 'சைரா ' படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்த நயன்தாரா அடுத்து வந்த 'காட்பாதர்' படத்தில் தங்கையாக நடித்தார். இப்போது ஜோடியாக நடிக்க உள்ளார்.