விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் |
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். நீண்ட காத்திருப்பு, கதாநாயகன் தேடல் என இந்தப் படம் கொஞ்சம் தாமதத்தை சந்திக்க வேண்டி இருந்தது. படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வந்த போதும் படத்தைப் பற்றிய சந்தேகங்கள் நிறையவே வெளிவந்தது.
அவற்றிற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக படத்தின் கதாநாயகன் சந்தீப் கிஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். அதில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் நடிக்கும் இப்படத்தின் மேக்கிங் வீடியோ மட்டுமே இடம் பெற்றிருந்தது.
ஒரே நாளில் 15 லட்சம் பார்வைகள் அந்த வீடியோவுக்குக் கிடைத்துள்ளது. இப்படத்திற்காக விஜய், இதுவரை எந்த ஒரு வாழ்த்துச் செய்தியையும் அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிடவில்லை. இருந்தாலும் விஜய் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார்கள்.