நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
சினிமாவில் ஒரு சில கதாபாத்திரங்கள் நமக்கு பொழுபோக்காகவும், பிரமிப்பையும் ஏற்படுத்தும். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் நாயகியாக ருக்கு கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே பக்கத்து வீட்டு பெண் போன்று நடித்து ரசிகர்களை கவர்ந்தார். படத்தில் ருக்கு கதாபாத்திரம் அதிகம் பேசுவதில்லை, ஆனால் அவரது மவுனங்கள் மூலம் முழு உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். காதல், வலி, நம்பிக்கை போன்றவற்றை அவரது கண்களால் வெளிப்படுத்தினார்.
பூஜாவின் இந்த கதாபாத்திரம் அவரது முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் தனித்துவமான வகையில் இருந்தது. தற்போது சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் பூஜா ஹெக்டே கதாபாத்திர காட்சிகள் மற்றும் கனிமா பாடல் நடனம் என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இவரது அடுத்த படங்களான ஜனநாயகன், காஞ்சனா 4 போன்ற படங்களையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.