நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கவுதம் மேனன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் அடுத்தவாரம் மே 16ல் திரைக்கு வரும் படம் டெவில்ஸ் டபுள் (டிடி) நெக்ஸ்ட் லெவல். சென்னையில் நடந்த இப்பட விழாவில் சந்தானம் பேசியதாவது : ‛‛தில்லுக்கு துட்டு, டிடி மற்ற பாகங்களில் எங்களுக்கு உதவி செய்தது எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன். அவர் இல்லாவிட்டாலும் அவர் ஆன்மா சா ந் தி அடையட்டும். சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தேன். என் நடிப்பை பார்த்துவிட்டு, மன்மதன் படத்தில் என் அறிமுக காட்சியில் கைதட்டல் வர வேண்டும் என்று நினைத்து எனக்கு சீன் வைத்தார் சிம்பு. அன்னைக்கு தியேட்டரில் எனக்கு கை தட்டல் வரணும் நினைத்தவர், இப்பவும் அதே நல்ல மனதில் இருக்கிறார்.
எஸ்டிஆர் 49 படத்தில் என் கேரக்டர் நல்லா வரணும் என்று பேசினார். என்னைக்குமே சிம்புக்கு துணையாக இருப்பேன். நான் சத்யம் தியேட்டர் புக் செய்து விழா நடத்துறேன், சிம்பு பற்றி பேசுகிறேன் என நடிகர் ஆர்யா நினைக்கிறார். அவர் படத்தின் தயாரிப்பாளர். கல்லூரியின் கதை படத்தில் நானும், ஆர்யாவும் நண்பர்களாக அறிமுகம் ஆனோம். அப்போது என்னை ரீச் கேர்ள்க்கு தெரியாது. உடனே என்னை இவர் காமெடி சூப்பர் ஸ்டார்னு சொன்னார்.
சேட்டை படத்தில் எனக்கு அந்த பட்டத்தை டைட்டிலில் போட்டார். நானும் ரஜினி சாரும் லிங்கா படத்தில் நடித்தபோது நீங்க காமெடி சூப்பர் ஸ்டாரா என கேட்டார். இல்லை, ஆர்யா தான் போட்டார் என்றேன். நீங்கள் சொல்லாமலா என்று கேட்டார். அப்படி மாட்டிவிட்டான். என் நிஜ வாழ்க்கையில் நிறைய காமெடி பண்ணுவான். நான் போக இருந்த வீட்டை இடிக்க சொன்னான். வீட்டை காணலைனு என் அம்மா பீல் பண்ணினாங்க. அன்று முதல் இன்று வரை நானும் ஆர்யாவும் சினிமாவில் எந்த வேலையையும் பயப்படாமல் செய்வோம். இந்த பட சமயத்தில் எனக்கு நிறைய பிரச்னைகள். ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் இந்த படத்தை ஆர்யா எடுத்தான்.
ஹாரர் ஜானர்ல இயக்குனர் கவுதம் மேனன், செல்வராகவன் இதுவரை இல்லாத அளவு சிறப்பாக செய்து இருக்காங்க. ராமாயணத்தில் ராமர் புகழ் பெற சீதை, லட்சுமணன், ராவணன் உட்பட பலர் காரணம். நான் ஜெயிக்க என் டீம் காரணம். என் அம்மா, மனைவி, குழந்தைகள், ரசிகர்கள் ஆகியோரும் என் வெற்றிக்கு காரணம்
இவ்வாறு சந்தானம் பேசினார்.