என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதன் முன்னோட்டமாக டிரைலர் வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. வழக்கம் போலவே இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் பேச்சு ஹைலைட் ஆகவே அமைந்தது. இந்த படத்தின் வேலைகளை முடித்துவிட்டு இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக ஒரு வாரத்திற்கும் மேலாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மட்டுமே கூலி படம் குறித்து பல சேனல்களில் தொடர்ந்து பேட்டி அளித்து வந்தார். அதில் புதுப்புது சுவாரசியமான விஷயங்களை கொடுக்கவும் அவர் தவறவில்லை. ஒவ்வொரு பேட்டியுமே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீண்டது.
பொதுவாக தங்கள் படம் குறித்து ஓரளவுக்கு மேல் பேச தயங்கும் இயக்குனர்கள் மத்தியில் லோகேஷ் கனகராஜ் இரண்டு மணி நேரம் பேசியது ரசிகர்களை மட்டுமல்ல நடிகர் ரஜினிகாந்தையே ஆச்சரியப்படுத்தியது. கூலி பட இசை வெளியீட்டு விழாவின் போது இது குறித்து பேசிய ரஜினிகாந்த், “நான் லோகேஷ் கனகராஜின் பேட்டியை உட்கார்ந்து கொண்டு பார்த்தேன்.. படுத்துக்கொண்டு பார்த்தேன்.. பின்னர் தூங்கி எழுந்து வந்து அப்போதும் பார்த்தேன்” என்று அவரது பேட்டி அவ்வளவு நீளமாக இருந்ததை ஜாலியாக கிண்டல் அடித்தார்.