லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் |
தெலுங்குத் திரையுலகத்தில் நடிகர் மகேஷ்பாபுவைத் தொடர்ந்து நடிகர் ரவி தேஜா ஐதராபாத்தில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றைத் திறந்திருக்கிறார். ஐதராபாத் நகரின் கிழக்குப் பகுதியில் வனஸ்தலிபுரம் என்ற இடத்தில் 'ஏஆர்டி சினிமாஸ்' என்ற பெயரில் அந்த மல்டிபிளக்ஸ் திறக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான 'எபிக் ஸ்கிரீன்' கொண்ட ஒரு தியேட்டருடன், மொத்தம் 6 தியேட்டர்கள் அந்த மல்டிபிளக்ஸில் உள்ளன. 4கே திரையீடு, டால்பி அட்மாஸ் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன.
ஏசியன் சினிமாஸ் நிறுவனம் இதற்கு முன்பு மகேஷ்பாபுவுடன் இணைந்து 'எஎம்பி சினிமாஸ் - ஏசியன் மகேஷ் பாபு சினிமாஸ்' என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை ஐதரபாத்தில் திறந்தது. தற்போது அந்த நிறுவனம் ரவிதேஜாவுடன் இணைந்து 'ஏஆர்டி சினிமாஸ் - ஏசியன் ரவி தேஜா சினிமாஸ்' என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை திறந்துள்ளது.
தனுஷ் நடித்து வெளிவந்த 'குபேரா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனம் இந்த ஏசியன் குரூப் நிறுவனத்தின் ஒரு அங்கம்.
தெலுங்குத் திரையுலகத்தில் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சில நடிகர்கள் அடுத்து தியேட்டர் தொழிலிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். தமிழ் சினிமாவில் சில தயாரிப்பாளர்கள்தான் தியேட்டர் தொழிலுக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், எந்த நடிகரும் அதில் இன்னும் நுழையவில்லை. இதே ஏசியன் நிறுவனம் சிவகார்த்திகேயனுடன் இணைந்து தமிழகத்தில் தியேட்டர் தொழிலில் ஈடுபடப் போவதாக முன்னர் செய்திகள் வெளிவந்தது.