நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

'வேட்டையன்' படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கூலி' படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சவுபின் ஷாகிர், கன்னட நடிகர் உபேந்திரா, பாலிவுட் நடிகர் அமீர் கான் என பலமொழி நடிகர்களும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தியில் என பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.
இந்த படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், படம் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: இந்த ஆண்டு எனது இசையில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'கிங்டம்', ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' ஆகிய 2 படங்களின் வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கிங்டம் படத்தில் 40 நிமிடக் காட்சிகள் பார்த்தேன். அற்புதமாக இருந்தது. 'கூலி' முழுப்படமும் பார்த்துவிட்டேன்; ரொம்ப அற்புதமாக புதுமையாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.




