பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் | தெலுங்கு சினிமாவில் தடம் பதிக்கும் கன்னட ஹீரோயின்கள் |
வில்லிதிருக்கண்ணன் இயக்க, மகேஷ், வைஷ்ணவி நடிக்கும் ஆண்டவன் என்ற சின்ன பட்ஜெட் படத்தில் கலெக்டராக நடித்து இருக்கிறார் இயக்குனர் கே.பாக்யராஜ். அந்த படத்தில் ஏன் நடித்தேன் என்பதற்கான காரணத்தை பாக்யராஜ் சொல்லியிருக்கிறார்.
''தமிழகத்தில் ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது. கிராமங்களை காப்பாற்றுங்கள்'' என்ற கருவில் இந்த படம் உருவாகிறது. இன்றைக்கு கிராமங்களின் நிலவும் பிரச்னைகள். மக்கள் நகரத்துக்கு, வெளியிடங்களுக்கு ஏன் செல்கிறார்கள். கிராமங்களை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை இந்த படம் விவரிக்கிறது. பல நிஜ கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள நிலைமையை வீடியோவாக எடுத்து, சமூக அக்கறையுடன் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஒரு கிராமத்தில் பலரும் சென்றுவிட, ஒரு வைத்தியர் மட்டும் அங்கே இருக்கிறார். தன்னை நாடி வருபவர்கள் ஏமாறக்கூடாது என்ற நினைப்பில் கஷ்டத்தை அனுபவிக்கிறார். அவருக்கு வீடு கொடுக்கும், அவரை பாராட்டும் கலெக்டராக நான் நடித்து இருக்கிறேன். நான் அந்த சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று நிலைமையை பார்த்தேன். அங்குள்ள வீடுகளின் நிலைமை பரிதாபமாக இருந்தது. ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பல ஊர்களில், நகரங்களில், நாடுகளில் இருப்பார்கள் என்று ஒருவர் சொன்னார். அங்கே வேலை வாய்ப்பு இல்லாததால் இடம் பெயர்ந்து இருக்கிறார்கள். சூழ்நிலைகளால், தங்கள் வாரிகளின் எதிர்காலம் கருதி சொந்த இடத்தை விட்டு பலர் செல்கிறார்கள். மக்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற கருவை இந்த படம் சொல்கிறது'' என்றார் கே.பாக்யராஜ்.