இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் தக் லைப் படம் ஜூன் 5ம் தேதி ரிலீஸ். இதில் திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்த படத்துக்காக இந்தியா மட்டுமல்ல ஆஸ்திரேலியா சென்றும் படக்குழு பல நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.
இந்நிலையில் தக் லைப் பட டப்பிங் பணிகளில் கமல்ஹாசன் பிசியாக இருக்கிறாராம். தமிழ் மட்டுமல்ல மலையாளம், இந்தி, தெலுங்கிலும் அவரே டப்பிங் பேசுகிறாராம். மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் நடித்த கமல்ஹாசனுக்கு தேசிய விருது கிடைத்தது. அந்த செண்டிமெண்ட், 36 ஆண்டுகளுக்குபின் தக் லைப் படத்திலும் நடக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.