ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பட வேகமாக நடந்து வருகிறது. எச்.வினோத் இயக்கும் 6வது படமான இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தோடு விஜய் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர அரசியலில் பயணிக்க இருக்கிறார். இதனால் இந்த படம் மாபெரும் வெற்றியடைய வேண்டுமென்று விஜய்யும் படத்தில் மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது படப்படிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்டது. இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவலின்படி விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று ‛ஜனநாயகன்' படத்தின் ப்ரோமோ டீசர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அனேகமாக படத்தின் மோஷன் போஸ்டர் அல்லது டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த செய்தியால் ரசிகர்கள் சந்தோசத்தில் மிதந்துள்ளனர்.