என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

பான் இந்தியா படங்கள் என்றாலே அதைத் தெலுங்கு இயக்குனர்கள் வசூலில் தட்டித் தூக்கிவிடுகின்றனர் என தெலுங்குத் திரையுலகத்தினர் பெருமையாக நினைக்கிறார்கள்.
'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' படங்களுக்காக ராஜமவுலி, 'கல்கி 2898 ஏடி' படம் மூலம் நாக் அஷ்வின், 'புஷ்பா 2' மூலம் சுகுமார் என நான்கு 1000 கோடி படங்களைத் தந்துள்ளனர் தெலுங்கு இயக்குனர்கள். இடையில் கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல் 'கேஜிஎப் 2' மூலம் 1000 கோடி வசூலைத் தந்திருக்கிறார்.
தமிழ்ப் படமாக இல்லை என்றாலும், தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஹிந்திப் படமான 'ஜவான்' படமும் 2023ல் 1000 கோடி வசூலித்தது.
மேலே குறிப்பிட்ட 6 படங்களைத் தவிர 'டங்கல், பதான்' ஆகிய 1000 கோடி படங்களை ஹிந்தி இயக்குனர்கள்தான் இயக்கியிருந்தார்கள். இந்தியத் திரையுலகத்தில் 1000 கோடி வசூலைக் கடந்த படங்கள் இவை.
அடுத்து எந்தப் படம் 1000 கோடி வசூலைப் பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதில் ஏதாவது ஒரு தமிழ்ப் படமாவது வந்துவிடாதா என தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அது இந்த ஆண்டில் நடக்குமா அல்லது அடுத்த ஆண்டில் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழிலிருந்து தெலுங்கிற்குச் சென்ற இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்சர்' படம் 1000 கோடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டு 200 கோடியைத் தாண்டாமல் போய்விட்டது. தமிழிலிருந்து ஹிந்திக்குச் சென்ற இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஹிந்திப் படமான 'சிக்கந்தர்' 200 கோடியைக் கூடத் தாண்டவில்லை.