தள்ளிப்போகுதா கூலி பாடல் வெளியீட்டு விழா | தீபிகாவிற்கு கிடைத்த கவுரவம் : 2026 ‛‛ஹாலிவுட் வாக் ஆப் பேம்'' -விற்கு தேர்வு | அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” |
'கேஜிஎப் 1,2' படங்களின் மூலம் கன்னடத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். 'கேஜிஎப் 2' படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் சாதனை படைத்தது. அடுத்து 'கேஜிஎப் 3' எப்போது வரும் என்று ரசிகர்களைக் கேட்க வைத்தது.
ஆனால், அதற்கடுத்து பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்த 'சலார்' படத்தை இயக்கினார் நீல். அப்படம் 2023ல் வெளிவந்தது. 'கேஜிஎப் 2' அளவிலான வரவேற்பையும், வசூலையும் தரவில்லை என்றாலும் அதில் பாதியளவாவது கிடைத்தது.
அப்படம் வெளிவந்த பின்பு 'சலார் 2' படம் ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டது. 2024ன் துவக்கத்திலேயே அதற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகத் தயாரிப்பாளர் சொன்னார். 2026ம் ஆண்டு 'சலார் 2' வெளியாகும் என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவித்தார்கள். ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்து அதன்பின் நடக்கவில்லை.
இந்நிலையில் ஜுனியர் என்டிஆர் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஆரம்பித்தார் பிரசாந்த் நீல். முதலில் ஜுனியர் என்டிஆர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. நேற்று முதல் இதன் படப்பிடிப்பில் ஜுனியர் என்டிஆர் இணைந்தார். நேற்று கர்நாடகாவில் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது.
2026ம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல். அப்படியென்றால் 'சலார் 2' அறிவித்தபடி வராதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜுனியர் என்டிஆர் படத்தை முடித்த பிறகே நீல் அடுத்து எந்தப் படத்தை இயக்குவார் என்பது தெரிய வரும் என்கிறார்கள். அதுவரை பிரபாஸ், யஷ் ரசிகர்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.