நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடிகை குஷ்பு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வந்தார். என்றாலும் அவர் எதிர்பார்த்தபடி காதாபாத்திரங்கள் அமையவில்லை. அதன்காரணமாக தற்போது பட தயாரிப்பு பணிகளில் இறங்கி விட்டவர், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், 20 கிலோ வெயிட் குறைத்து தனது உடல் தோற்றத்தை மாற்றிக் கொண்ட புகைப்படங்களை அவர் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு எதிர்காலத்துக்கு தயாராக இருப்பதாகவும் பதிவு போட்டுள்ளார்.
மேலும், 'இன்ஸ்டாகிராம், எக்ஸ்' பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்த்து சக நடிகர் நடிகைகள் அவரது புதிய தோற்றத்தை பார்த்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம், குஷ்பு இப்படி 20 கிலோ வெயிட் குறைத்ததை சிலர் ட்ரோல் செய்தும் வருகிறார்கள். அதோடு எடையை குறைப்பதற்கு இவர் மாற்று முறைகளை பயன்படுத்தி உள்ளார் என்று கமெண்ட் கொடுக்க, அதற்கு குஷ்பு எதிர்வினை ஆற்றி வருகிறார்.