‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

இந்த வருடம் வெளியான 'குடும்பஸ்தன்' படம் பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியில் நடிகை சான்வே மேகன்னாவுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. வெண்ணிலா கதாபாத்திரத்திற்கு அவரது இயல்பான மற்றும் ஆழமான நடிப்பு, ரசிகர்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மறக்க முடியாததாக மாற்றியுள்ளது. 'குடும்பஸ்தன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வர துவங்கி உள்ளன.
சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு எதிர்பாராத விதமாகதான் வந்தது. ஐதராபாத்தில் சான்வே படித்துக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஏதோ ஒன்று சிறப்பாக இருப்பதை கணித்த நடிகை ஜெயசுதா, சான்வேக்கு முதல் பெரிய வாய்ப்பை கொடுத்தார். அந்த தருணம்தான் சான்வேக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. பிட்ட காதலு, புஷ்பக விமானம் போன்ற படங்களில் நடித்தார். குடும்பஸ்தன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.
குடும்பஸ்தன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சான்வி மேக்னாவுக்கு தொடர்ந்து குடும்ப கதைகளில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது, ஆனால் அவருக்கு எல்லா விதமான கேரக்டர்களிலும் நடிக்க வேண்டுமாம் குறிப்பாக ஆக்ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : 'குடும்பஸ்தன்' படம் கதாநாயகியாக எனக்கு பெரும் வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. குடும்பஸ்தன் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பலரும் தங்களுடன் பொருத்திக் கொண்டார்கள். ரசிகர்கள் கொடுத்து வரும் பாராட்டு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அடுத்தடுத்து அதே மாதிரியான பட வாய்ப்புகள் வருவது மகிழ்ச்சி தான். ஆனால் ஆக்ஷன், ஸ்பை த்ரில்லர், தீவிரமான ஸ்போர்ட்ஸ் கதை, ரொமான்டிக் காமெடி போன்ற வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்புகிறேன். இதுபோன்ற கதைகளில் முழுமையான நடிப்புத் திறனை வெளிப்படுத்த முடியும். என்றார்.




