நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் |
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் "கமாண்டோவின் லவ் ஸ்டோரி". நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை. கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். அவரே படத்தை இயக்கவும் செய்கிறார். அவரது ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோர் நடிக்கின்றனர்.
இளையராஜா அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் சிவராமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் பழநிபாரதி எழுதிய கொஞ்சி கொஞ்சி பேசவா... என்ற பாடலையும், தேன்மொழி எழுதிய வல்லினமா மெல்லினமா இடையினமா... என்ற பாடலையும் ஏஆர் ரஹ்மானின் சகோதரி இஸ்ரத் காதிரி பாடியுள்ளார்.
இந்த இரு பாடல்களும் தனி ஆல்பமாக வெளியிடப்பட இருக்கிறது. இதனால் இஸ்ரத் பாடியதோடு மட்டும் இல்லாமல், படத்தின் மேக்கிங் வீடியோவிற்காக குலுமணாலி மலைப் பிரதேசங்களில் பாடி, நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மானின் கச்சேரிகளில் பாடி வந்த இஸ்ரத் தற்போது சில படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சில இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். தற்போது முதல் முறையாக திரையில் தோன்றுகிறார்.