மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' | 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் மிஷ்கின் | ஹீரோவானார் பிக்பாஸ் விக்ரமன் | தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கும் சிராக் ஜானி | பிளாஷ்பேக் : சிவாஜி பட ரீமேக்கில் கமல் | பிளாஷ்பேக் : பானுமதிக்கு ஜோடியாக நடித்த தங்கவேலு | விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா? | விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? |

நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கும் திரைப்படம் இட்லி கடை. இந்த திரைப்படம் ஏப்ரல் 10 அன்று வெளியாகுமென்று சொல்லப்பட்டது. ஆனால் படம் எதிர்பாராதவிதமாக சொன்ன தேதியில் வெளியாக வாய்ப்பில்லை. படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பும், சின்ன சின்ன காட்சி அமைப்புகளும் படவேலைகள் இருப்பதால் சொன்ன தேதியில் வெளிவர இயலாமல் போனது.
தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தாய்லாந்து செல்லவிருக்கிறார்கள். இன்னும் மொத்தம் 10 - 15 நாட்கள் ஷூட்டிங் இருப்பதாலும் இந்த படத்தை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியிடலாமா என்ற யோசனையில் படக்குழு உள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் வரவிருப்பதால் இட்லி கடை படத்தை எப்போது வெளியிடலாம் என்ற கோணத்தில் படக்குழு யோசித்தும் வருகிறது. இதனால் இட்லி கடை வெளியாவதில் புதிய சிக்கலாக இந்த தேதி மாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.