பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2023ல் வெளியாகி வெற்றியைப் பெற்ற படம் ஜெயிலர். தற்போது இதன் இரண்டாம் பாகம் ஜெயிலர் 2 என்கிற பெயரில் துவங்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்ந்தார். இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு நீங்கள் தேர்வாகி இருக்கிறீர்கள் என்று கூறி மலையாள குணச்சித்திர நடிகையான ஷைனி சாரா என்பவருக்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு ஒரு நபர் கூறியுள்ளார்.
சோசியல் மீடியா பக்கத்தில் தனது புகைப்படங்கள், வீடியோக்களை ஷைனி அவ்வப்போது பகிர்ந்து வருவதால் அதைப் பார்த்து உங்களை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார் அந்த நபர். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் தானே இரண்டாவது பாகத்திலும் மனைவியாக நடிக்க முடியும் என்று ஷைனி கேட்டதற்கு இது இன்னொரு முக்கியமான கதாபாத்திரமாக உங்களுக்கு இருக்கும். இதில் சஸ்பென்ஸ் இருக்கிறது என்று கூறி உங்களுடைய நடிகர் சங்க உறுப்பினர் கார்டு, ஆதார் கார்டு அனைத்தின் நகல்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்பி வையுங்கள் என்று கூறியுள்ளார்.
என்னிடம் நடிகர் சங்க உறுப்பினர் கார்டு இல்லையே என்று ஷைனி சாரா கூறியுள்ளார். உடனே அந்த நபர் நடிகர் சங்க கார்டு இருந்தால் தான் படத்தில் நடிக்க முடியும்.. பரவாயில்லை, உங்களுக்கு நான் அதை விரைவில் பெற்று தர ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அதற்காக 12,500 ரூபாய் தருமாறு கேட்டுள்ளார். அந்தநபர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் இரண்டு நாட்கள் கழித்து பணம் தருகிறேன் என்று ஷைனி சாரா கூறியுள்ளார். இருந்தாலும் நீங்கள் உடனடியாக பணம் தந்தால் தான் கார்டுக்கு விண்ணப்பித்து எடுக்க முடியும். இந்த பட வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்று அந்த நபர் அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சந்தேகம் வலுக்கவே, தனது சக சினிமா நட்பு வட்டாரம் மூலமாக தமிழ் சினிமாவில் இது குறித்து விசாரித்த போது அப்படி எல்லாம் ரஜினிக்கு ஜோடியாக எந்த தேர்வும் நடக்கவில்லை. தவிர நடிப்பதற்கு நடிகர் சங்க உறுப்பினர் அட்டை இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை என்று கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து அந்த நபரிடம் இதுபற்றி ஷைனி பேச முயற்சித்த போது, அந்த நபர் போனை கட் செய்து விட்டு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று விட்டார். இருந்தாலும் இப்படி எல்லாம் கூட மோசடி நடக்கிறது எனவே இது குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்று தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக கூறியுள்ளார் ஷைனி சாரா.