மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி |
பிரேமம் படத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், அதன்பிறகு தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் அறிமுகமானார். பின்னர் தள்ளிப் போகாதே, சைரன், டிராகன் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் மற்றும் லாக் டவுன் போன்ற படங்களில் நடிக்கிறார். அடுத்து பரதா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பர்தா அணியும் கிராமத்து பெண்கள் குறித்த கதையில் இந்த படம் தயாராகி வருவதால் ஒரு மெசேஜ் சொல்லும் வேடத்தில் சமந்தா நடித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.