விலை உயர்ந்த காரை வாங்கிய ஊர்வசி ரவுட்டேலா | விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் டீசர் வெளியானது | சம்பள பாகுபாடு : சமந்தா முன்னெடுத்த செயல் | டான்சர் என்ற முத்திரையை உடைக்க விரும்பும் ஸ்ரீலீலா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன் : ஹீரோ யார் தெரியுமா? | பராசக்தி படத்தில் இணைந்த குரு சோமசுந்தரம், பசில் ஜோசப் | ராஜமவுலி படப்பிடிப்பு: ஒடிசா துணை முதல்வர் மகிழ்ச்சி | 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் சாம் சிஎஸ் | 33 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக கே ரங்கராஜ் | அடல்ட் கன்டன்ட் படமாக வெளிவரும் 'பெருசு' |
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பது இன்னும் ஸ்பெஷல். 1965 காலகட்டத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கதையில் இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க குரு சோமசுந்தரம் இணைந்துள்ளார். குரு சோமசுந்தரம் ஜோக்கர், மின்னல் முரளி, பாட்டில் ராதா, குடும்பஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் அவரின் அசாத்திய நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தவிர்த்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இயக்குனர் பசில் ஜோசப் என்பவரும் இவர்களுடன் இணைந்து நடித்து வருகிறாராம். இந்த பசில் ஜோசப் அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவும் கதை சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.