புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பான் இந்தியா இயக்குனரான ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு ஒரிசாவில் நடைபெறும் மற்றுமொரு பெரிய படத்தின் படப்பிடிப்பு இது. இது குறித்து ஒரிசா மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“முன்பு, மல்காங்கிரியில் 'புஷ்பா 2', இப்போது பிரபல இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபுவின் 29வது படத்தில் தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களான மகேஷ் பாபு, பிருத்விராஜ் சுகுமாரன், சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட நடிகை பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கோராபுட்டில் நடைபெற்று வருகிறது.
ஒடிசாவில் திரைப்பட படப்பிடிப்புக்கு ஏராளமான சினிமா நிலப்பரப்புகள் உள்ளன என்பதை இது நிரூபிக்கிறது. இது ஒடிசா சுற்றுலாவுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். இது ஒரு முக்கிய படப்பிடிப்பு இடமாக மாறும். ஒடிசாவின் திறனை ஆராய அனைத்து திரைப்படத் துறைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். மேலும், முழு ஆதரவையும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பையும் தருவோம் என உறுதியளிக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.