'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கும் அல்லது ஆண் திரை கலைஞர்களுக்கு நிகராக பெண் திரை கலைஞர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மெல்ல மெல்ல வலுத்து வருகிறது. இந்த விஷயத்தை நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக முன்னெடுத்துள்ளார்.
சமீபத்தில் திரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார் சமந்தா. இவர் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தை பெண் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்க உள்ளார். இது இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். சமந்தாவே இதில் கதையின் நாயகியாக நடிக்க போகிறார். இந்த படத்தில் பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க போகிறாராம் சமந்தா.
இதுபற்றி இயக்குனர் நந்தினி கூறுகையில், ‛‛நடிகை சமந்தா ஒரு தயாரிப்பாளராக பாலின பாகுபாடு இன்றி சம்பளம் வழங்க போவதாக தெரிவித்துள்ளார். அதாவது இதில் பணியாற்றும் ஆண் கலைஞர்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுமோ அதே சம்பளம் தான் பெண் கலைஞர்களுக்கும் வழங்கப்படும். இந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் இப்படி ஒரு விஷயத்தை முன்னெடுத்து செய்யவில்லை'' என்றார்.
சமந்தாவின் இந்த விஷயம் பாராட்டுகளை பெற்று வருகிறது.