என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு | 6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… | 'பெத்தி' டிரைலர் வெளியீட்டு விழா மும்பைக்கு மாற்றம் |

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் 'பெருசு'. நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழாவில் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசியதாவது: ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் 16வது படம் இது. அடல்ட் ஃபிலிம் என்றாலே சில விஷயங்களை டார்கெட் பண்ணி தான் இந்தியாவில் படங்கள் இருக்கும். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இதை இந்த சுவாரசியமாகவும் முகம் சுழிக்காத விதமாகவும் எடுப்பார்கள். 'பெருசு' படத்தில் அதனை சிறப்பாக கொண்டு வந்திருக்கிறோம். அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம்.”. என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், பேசும்போது “ மற்றவர்களை சிரிக்க வைப்பது கடினமான விஷயம். கதையின் முக்கியமான விஷயமே நடிகர்கள்தான். நானும்தான் வைபவ்வும் அவரது அண்ணனும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் குடும்பத்துடன் நிச்சயம் பார்க்கலாம். நகைச்சுவையுடன் சேர்ந்து எமோஷனும் கதையில் இருக்கும். எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சரியாக எழுதப்பட்ட கதை இது. ”என்றார்.




