நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி |

இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில் ரெட்டி, பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனிஷ்காந்த், கருணாகரன், சாந்தினி தமிழரசன், நிஹாரிகா, தீபா சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் மார்ச் 14ல் வெளியான படம் ‛பெருசு'.
வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் திடீரென இறந்து விடுகிறார். ஆனால் அதை ஊர்காரர்களுக்கு சொல்ல முடியாத தர்ம சங்கடமான சூழலுக்கு குடும்பத்தார் உள்ளனர். அது என்ன என்பது தான் படத்தின் ஒருவரிக் கதை. அடல்ட் காமெடி படமாக வெளியானது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூலில் சுமாரான வெற்றியை தேடி தந்தது.
தற்போது பெருசு திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் தேதி கசிந்துள்ளது. அதன் அடிப்படையில் நெட்பிளிக்ஸில் தளத்தில் வருகிற ஏப்ரல் 11ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.