காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
ரஜினிகாந்த் நடிப்பில் 'பேட்ட', ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்த 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படத்தை இயக்கியுள்ளார். மே 1ம் தேதி படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் 'ஸ்டோன் பென்ச்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன்மூலமாக பல படங்கள், வெப் தொடர்களை தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் 16வது படம் பற்றிய அறிவிப்பு இன்று (ஜன.,13) வெளியாகியுள்ளது. 'பெருசு' எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வயதானவரின் இறுதிச்சடங்கை மையமாக வைத்து முழுநீள காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தில் வைபவ், அவரது சகோதரர் சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். இளங்கோ ராம் என்பவர் இயக்கியுள்ளார்.